துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி!

நாட்டின் 17-வது துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

வாக்குப் பதிவு துவங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
நாட்டின் 16-வது துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப்தன்கர் கடந்த ஜுலை 21ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.


இத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

 


தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்றத்தின் F-101 அறையில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்பது வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் இன்று மாலையிலேயே தெரிந்துவிடும்.

Comments are closed.