மணிப்பூர் சென்றார் பிரதமர் மோடி: பாதுகாப்பு படையினரை தாக்கிய மணிப்பூர் மக்கள்!

இனக்கலவரம் நடைபெற்று 2 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக  மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி ரூ.8,500 கோடிக்கு மேல் பெறுமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் அவ்விரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அவ்விரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.