அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!

அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில் விக்கிவாண்டி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை ஒன்று இறந்தது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பால பகுதியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை ஒன்று கடக்க முயன்றுள்ளது. அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அச் சிறுத்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

விக்கிரவாண்டி பகுதிக்கு சிறுத்தை எப்படி வந்தது, வேறு பகுதியில் இருந்து வழி தவறி வந்ததா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.