முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியும் திமுக எம்.பி.யான கனிமொழியின் தாயருமான ராசாத்தி அம்மையார் உடல நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியுடன் மயிலாப்பூர் சிஐடி காலனியில் வசித்துவரும் ராசாத்தி அம்மாள் வயிறுசார்ந்த பிரச்சினைக்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவக்குழுவினர் அவரது உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Comments are closed.