ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே. அச்சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டது.

மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கரூர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் கரூர் எஸ்.பி.யை இணைக்கவும் நீதின்றம் உத்தரவிட்டது.

Comments are closed.