அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு இன்று அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருள்களின் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் விலை குறையும் பொருள்கள்:
உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது.
பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம்
மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், க்ரையான்ஸ் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கம்
தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம். இதனால் பிரிமியம் தொகை குறையும்
வீட்டு உபயோகப் பொருள்கள், சாமானி மக்களுக்கான பொருள்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் விலை குறைப்பு
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு
குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயாப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
இதேபோல நொறுக்குத் தீனிகளுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு
ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு
மருத்துவத்துறையில் தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்சிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

Comments are closed.