தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!

திமுகவின் கூட்டணிக் கட்சிகள்  ‘ஜால்ரா’ போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தூபம் போடுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில் மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.

அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாகுபாடின்றி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றார் எடப்பாடி பழனிசாமி.

Comments are closed.