சரிந்து விழுந்த அலங்கார வளைவு: நூலிழையில் தப்பிய இபிஎஸ்!

செங்கம் அருகே அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது. அவ்வழியே சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை வரவேற்று வழிநெடுகிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், காஞ்சி, புதுப்பாளையம் பேரூராட்சி வழியாக செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களை சந்திக்க வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நுழைவு வாயில் (அலங்கார வளைவு) திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றில், அவரது வாகனம் கடந்து சென்ற மறு நொடியே, அவரது காரை பின் தொடரந்து வந்த கார் மீது விழுந்தது.

நல்லவேளையாக, எடப்பாடி பழனிசாமி பயணித்த வாகனம் கடந்த மறுநொடியில் அந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால், எவ்வித காயமுமின்றி நூலிழையில் தப்பினார் எடப்பாடி பழனிசாமி.

இவ்விபத்தில் அக் கார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

 

Comments are closed.