சோழர் கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோழர் கால பெண் சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி அடுத்துள்ள பைத்தாம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வின்போது இரண்டு பெண் உருவ சுடுமண் பொம்மைகள் பூமியி;ன் மேற்பரப்பில் கண்டெடுக்க்கப்பட்டுள்ளன.

இப் பொம்மைகளின் உயரம் 5 செ.மீ. இரண்டு பொம்கைளும் ஒரே அளவை கொண்டதாக உள்ளன. சுடுமண் பொம்மையின் முகம் ஆந்தையின் முகம்போல் உள்ளது.

1995-96ஆம் ஆண்டு விழுப்புரம் அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த சுடுமண் போலவே பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதே காலத்தைச் சேர்ந்த மக்கள் தென்பெண்ணை கரையோரப் பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல்.

தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்ணரிப்பின் காரணமாக மண்ணுக்கடியில் இருந்த தொல்பொருள்கள் பூமியின் மேற்பரப்பில் வந்திருக்கலாம் என்கிறார் இம்மானுவேல்.

Comments are closed.