காதலன் கண் முன்னே சீரழிக்கப்பட்ட தலித் மாணவி!

காதலனை மரத்தில் கட்டிவைத்து, 19 வயது தலித் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.

பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலிஹர்சந்தி கோவில் அருகே சனிக்கிழமை மதியம் இக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

அம் மாணவி தனது காதலனுடன் கோவிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, நான்குபேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று அவ்விருவரையும் புகைப்படங்களையும் வீடியோவையும் எடுத்து அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டுள்ளது.

பணம் கொடுக்க மறுத்ததால், காதலனை மரத்தில் கட்டி வைத்து, அக் கும்பலைச் சேர்ந்த இருவர் அப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். நான்காவது குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Comments are closed.