திருவாரூர் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு பிரமாண்ட மாலை அணிவித்தது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிககள் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமையன்று டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர் வந்த விஜய்க்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, கிரேன் உதவியுடன் அவருக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. தனது பிரசார வாகனத்தில் நின்றவாறு விஜய் அம் மாலையை தனது கரங்களால் தொட்டு ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இச் சம்பவம் தொடர்பாக ஜெ.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் என மொத்தம் 4 பேர் மீது ; போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.