விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு இன்று (அக்.9) அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இது வெறும் புரளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.