கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி படகை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 3 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 3 படகுகளில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு படகை நிறுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த 4 பேர், அவர்களது படகைக் கொண்டு மீனவர்கள் இருந்த படகை மோதி, இயந்திரங்களை சேதப்படுத்தி தாக்கியுள்ளனர்.
இத் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, செல்வராஜ் ஆகிய மூவரும் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.