இன்று அரியவகை சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம்!

இன்று (செப்.7) இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இச் சந்திர கிரகணத்தை (Lunar Eclipse) பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படும் நிகழ்ச்சியே சந்திர கிரகணம் எனப்படும்.

இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும். இரவு 10 மணி அளவில் டார்க் ஷேடோ (dark shadow) தொடங்கி 12 மணிவரை நடைபெறும். இறுதியாக, அதிகாலை 2 மணிக்கு நிறைவடையும்.

இரவு 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது சிவப்பு நிலவாக (Red Moon) காட்சியளிக்கும்.


இந்த அரிய நிகழ்வை பொதுமக்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்தவாறு வெறும் கண்களால் பார்க்கலாம். அதேபோல இன்று இரவு விமானத்தில் பயணிப்பவர்கள் இந் நிகழ்வை எளிதாக காணலாம்.
இதற்கிடையே, கொடைக்கானல் அப்சர்வேட்டரி (Observatory) பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இம் முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க ராட்சத தொலைநோக்கிகள் அமைத்து, விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை எடுத்துரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வான் இயற்பியல் ஆய்வகத்தில் இன்று இரவு மட்டும் சுற்றுப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நுழைவு கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.