அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்துவரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அவர் செப்டம்பர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது தோட்டத்தின் முன்பு காலை முதலே அவரது ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “வருகிற 5ஆம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன்,” என்றார்.
“என்ன கருத்து சொல்லப்போகிறேன் என அப்போது தெரிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திருங்கள்,” என்றார் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து விலகி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிகிறது.

Comments are closed.