தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது : பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியத் தலைநகர் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

“நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது. இச் சீர்திருத்தத்தால் சிறு, குறு தொழில்கள் பலனடையும். சீர்திருத்தத்திற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.

ஏழை, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான நிதி மேம்படுத்தப்படும். லட்சாதிபதி பெண்களின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயரும். வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 3.5 கோடி இளைஞர்கள் பயனடைவர். இளைஞர்களுக்காக ஒருலட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

விவசாயிகள், மீனவர்களின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்படாது. மக்களுக்காக செயல்படுவதே அரசு, அதை நோக்கியே பயணிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.