2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே தலைவர் : பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றுவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், அக் கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு, அதாவது ஆகஸ்ட் 2026 வரை, நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக் காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2026 வரை டாக்டர் அன்புமணியே கட்சியின் தலைவராக தொடர்வார். ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்காவிட்டால் மாநில அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்துவிட்டதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.