அரசு பளிளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் ‘நான் போலி ஆசிரியர் அல்ல’ என்பதை அடுத்த மாதத்துக்குள் நிரூபிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் பலர் போலிச் சான்றுகளை கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டம், டிப்ளமா படிப்புகளுக்கான சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதை முடித்து, அடுத்த மாதத்துக்குள், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்கத்தின் நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலருக்கு அவற்றை அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Comments are closed.