கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் சிக்குவர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில், தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்றிரவு கொடுங்கையூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:

கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் கொடுத்த விளக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளன. பகல் 12 மணிக்கு வரவேண்டிய தவெக தலைவர் விஜய், இரவு 7 மணிக்கு வந்தாலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ என விஜய் பாட்டு பாடியதும், ஜெனரேட்டர் இணைப்பு துண்டானது. செருப்பு வீச்சு நடந்தது. லத்தி சார்ஜ் நடந்தது.
மருத்துவமனையில் 52 பேர் அனுமதிக்கப்பட்டனர். முதல்வரோ 200 பேர் என்கிறார். அவரது கருத்து முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
‘ஒரு ஆளுக்கு உடற்கூறாய்வு செய்ய ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், அவ்வளவு விரைவாக எப்படி செய்தீர்கள்?’ என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இச் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இவ்விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவர் என்றார் நயினார் நாகேந்திரன்.

Comments are closed.