கரூர் சம்பவத்திற்கு தமிழக சட்டசபை இரங்கல்!

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், எம்எல்ஏ அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து முன்னாள் ஆளுநர் கணேசன், இ.கம்யூ. மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாளை மீண்டும் சட்டசபை கூடி, மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம் 16ஆம் தேதிவரை நடைபெறும். விவாதத்திற்கு, 17ஆம் தேதி பதில் அளிக்கப்படும்.

இக் குளிர்கால கூட்டத்தொடரில், கரூர் துயரச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இக்கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.