பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு முறைகள் வகுக்கும்வரை புதிதாக எந்த கூட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப்பயணத்துக்கு நிபந்தனைகளுடன் தமிழக காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
மதுரையில் அக்.12ஆம் தேதி துவங்கும் நயினார் நாகேந்திரனின் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று, தொடங்கி வைக்கிறார்.
பிரசாரத்துக்கு வரும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.