ரஜினிகாந்த் இமயமலை ஆன்மீகப் பயணம்: இணையத்தில் வைரலாகும் படங்கள்!

ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

தான் நடித்த திரைப்படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவருக்கு இப் பழக்கம் உருவானது.

தற்போது, ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், இன்று பத்ரிநாத் செல்கிறார்.

பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் அங்கு ஒரு வாரம் தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

Comments are closed.