கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் இன்று (செப்.30) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 இரவு நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் காவல்துறையினர் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து வாந்தி பரப்பியதாக ‘ரெட்ஃபிக்ஸ்’ சேனலின் பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டு, ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.