கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

கரூர் சம்பவம் குறித்தான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலாயுதம்பாளையத்தில் தவெக சார்பில் நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜயோ, தாமோ செல்வதை தடுக்கக் கூடாது என ஆதவ் அர்ஜுனா அம் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என்றும், உள்ளுர் அரசியல்வாதிகள், குண்டர்கள் இணைந்து செயல்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments are closed.