தடுப்பூசி போடப்பட்ட 2 வயதுக் குழந்தை மரணம்!

தடுப்பூசி போடப்பட்டதால் 2 வயதுக் குழந்தை இறந்ததாகக் கூறி, நீதி கேட்டு அக்குழந்தையின் உறவினர்கள் திருப்பத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை ஊசித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விக்னேஷ் – கிருத்திகா தம்பதியினரின் 2 வயது மகன் பூமீஸ். அக் குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் நேற்று நடைபெற்ற முகாமில் இரண்டு வயதிற்கான தடுப்பூசி போட்டுள்ளனர்.

பின்னர், குழந்தையை உறங்க வைத்த நிலையில், குழந்தை எழாததால் இன்று அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று பரிசோதித்தனர். அப்போது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அக் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், காவல்துறையினர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் சென்றதைக் கண்டித்து, வாணியம்பாடியில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை வரை சுமார் 70 கி.மீ. தூரம் துரத்தி வந்த உறவினர்கள் ஆம்புலன்ஸை வழிமிறத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.