சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத் திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. இதையடுத்து, உதயம் திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம்.திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை அண்மையில் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒருகாலத்தில் சென்னையின் அடையாமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Comments are closed.