அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கான அமமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அரசியலில் இருப்பதாகல் அரசியல் மட்டும் தான் பேச வேண்டும் என்று அவசியமில்லை. நண்பர்கள் என்ற முறையில் அண்ணாமலையுடன் ஒரு மணி நேரம் பேசினேன்.
அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதுதான் எங்களை கூட்டணிக்கு கொண்டு வந்தார். தில்லியில் நாங்கள் யாரையும் சந்திக்கவில்லை. அண்ணாமலை மூலமாகதான் கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியை விட்டு விலகிய பிறகும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
கூட்டணி விவகாரத்தில் நீங்கள் அவசரப்பட வேண்டாம் என அவர் தொடர்ந்து கூறி வந்தார். முடிவை பரிசீலனை செய்யக் கோரினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தொடரும்பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்யவே முடியாது என்பது தான் உண்மை,” என்றார் டிடிவி தினகரன்.

Comments are closed.