மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை: 21 ஆண்டுகள் சிறை!

தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ஜான்சன். வயது 45. இவர் பதினோரு வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ் வழக்கு திருவள்ளுர் மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதபதி உமா மகேஸ்வரி,  மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஜான்சனுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Comments are closed.