நேருக்கு நேர் மோதிக் கொண்ட திமுக எம்பி மற்றும் எம்எல்ஏ

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெறற் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி-எம்எல்ஏ ஆகிய இருவரும் விழா மேடையில் கலெக்டர் முன்னிலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதனால் அந்நிகழ்ச்சி பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

ஆண்டிப்பட்டியில் இன்று காலை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு பேனரில் எம்எல்ஏ படம் மட்டும் இருந்தது. எம்.பி.யின் படம் இல்லை. இதனால் திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் கோபமடைந்து பேசினார்.

இந்நிலையில், நலத்திட்ட உதவிகளை நான் தான் வழங்குவேன் எனக்கூறி நலத்திட்ட உதவி அட்டையை தங்க தமிழ்ச்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்கினார் எம்எல்ஏ மகாராஜன்.

புரோட்டோகால்படி, தேனி மக்களவை தொகுதி எம்.பி.யின் படம் வரவேற்பு பேனரில் ஏன் இல்லை என மாவட்ட கலெக்டரிம் கேள்வி எழுப்பியதுடன், மேடையிலேயே எம்எல்ஏ மகாராஜனை திட்டினார் தங்க தமிழ்ச்செல்வன். இதையடுத்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எம்எல்ஏ.

திமுக எம்பிஇ எம்எல்ஏ ஆகிய இருவரும் அரசு நிகழ்ச்சியில கலெக்டர் முன்னிலையில் மேடையிலேயே நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துவிட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்

 

Comments are closed.