நீ யாருடைய ரசிகன்-னு நான் கேட்டேனா? : ரஜினி கிண்டல்

நடிகர் ரஜினிகாந்த மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கூலி தி பவர்ஹவுஸ்’ என்ற பாடல் அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது.

படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “கைதி படத்தைப் பார்;த்துவிட்டு லோகேஷ் கனகராஜுக்கு ஃபோன் செய்து பாராட்டினேன். எனக்கு ஏதாவது கதை வைத்துள்ளீர்களா என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு இல்லாத கதையா ஸார் என்றார். என்னிடம் கதை உள்ளது என்றார். அடுத்து, நான் கமல் ஃபேன் (ரசிகன்) ஸார் என லோகேஷ் கூறினார். இது என்ன ராசியோ தெரியல…நெல்சன் எங்க வீட்டுக்கு வந்து நல்ல காபி கிடைக்குமா என்கிறார். லோகேஷிடம் கதை கேட்டால் நான் கமல் ஃபேன் என்கிறார்.

உன்ன நான் கேட்டேனா? இல்ல… நான் கேட்டேனா? நீ யார் ஃபேன்-னு நான் கேட்டேனா? அப்புறம் ஏன்? என்று கிண்டலாக தெரிவித்தார்.

 

Comments are closed.