மாணவருக்கு பாலியல் வன்கொடுமை: 4 மாணவர்கள் ‘போக்ஸோ’வில் கைது

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சக மாணவர்கள் 4 பேர் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் விளையாட்டு விடுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், அருகிலுள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

இந் நிலையில், இவ்விடுதியில் தங்கிப் படிக்கும் 14 வயதுடைய 9ஆம் வகுப்பு மாணவரை அதே விடுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்துவரும் 4 மாணவர்கள் ஓராண்டுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அம் மாணவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அம் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றச்சாட்டுக்குள்ளான 4 மாணவர்களையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

Comments are closed.