பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின.

அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.

இந்நிலையில், மாணவர்களுக்கு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதிவரை 12 நாள்கள் அரைiயாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து ஜனவரி 5ஆம் தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments are closed.