காரில் இளம்பெண் கடத்தல்? கோவையில் மீண்டும் பரபரப்பு!

கோவையில் இருகூர் தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்ணை நேற்று மாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், வலுக்கட்டாயமாக இழுத்துக் காரில் ஏற்றிச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இருகூர் விவகாரத்தில் வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல்துறை அவசர உதவி எண் 100க்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதிவரை வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளோம். அதில் காரின் எண் தெளிவாக இல்லை. காருக்குள் பெண் இருந்ததற்கு எந்தவொரு பதிவும் தெளிவாக இல்லை. இது தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வுhகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.

Comments are closed.