தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) பணிக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
https:/electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்டட விபரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
பெயர் இல்லாதவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது உங்களுடைய வாக்குச்சாவடி அலுவலரிடமோ படிவத்தைப் பெற்று நிரப்பிக் கொடுக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க அந்தந்த வாக்குச்சாவடிகளில் வருகிற டிசம்பர் 20,21ஆம் தேதிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது. இதனையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய படிவம் 6-ஐ ஜனவரி 18ஆம் தேதிக்குள் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
மேலும், படிவம் 7 – வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க (இடமாறுதல் அல்லது இறப்பு காரணமாக)
படிவம் 8 – பெயர், வயது, முகவரி மாற்றத்திற்கு
படிவம் 8ஏ – உங்களுடைய பெயரை வேறு சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றுவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும். இதன் பிறகு எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.