மறைந்த தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழாவையொட்டி, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகி எச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தனது ஜமீன் சொத்துகளில் பெரும்பகுதியை பிற சமுதாயத்திற்கு வழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். பற்றற்ற பண்பாளர் தேவர் திருமகனார். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும். நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் வீரத்திருமகனார் முத்துராமலிங்க தேவர். சத்தியம், வாய்மையை கடைப்பிடித்தவர்” எனப் புகழாரம் சூட்டினார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் 8000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Comments are closed.