குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) இன்று பதவி ஏற்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், தனது பதவியை ஜுலை 12-ஆம் தேதி ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அப் பதவிக்கு செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்டது.
இத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார்.

இத் தேர்தலில், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றநிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.