தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்த சரவணன், ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 5 மணியளவில் இறந்தார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

ஏவி மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தை அவருக்கு பின்னர், சரவணன் திறம்பட நடத்தி வந்தார். நடிகர்கள் எம்ஜிஆர்;, சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதுகளைப் பெற்றவர் சரவணன். மேலும், சிறந்த திரைப்படங்களை தயாரித்ததற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.