வாங்கிய கடனுக்காக, விவசாயி ஒருவரின் கிட்னியை கந்துவட்டிக் கும்பல் பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக, 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் மின்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதாசிவ் குடே (29). விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், பால் வியாபாரம் செய்ய கடந்த 2021ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் கந்து வட்டிக்கு கடன் வாங்கினார். அத் தொழிலிலும் நஷ்டம் ஏற்படவே, அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும், கந்து வட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் கடனை அடைக்க கிட்னியை விற்குமாறு வற்புறுத்தியுள்ளனர். வேறு வழியின்றி சம்மதித்த அவரை, கொல்கத்தா அழைத்துச் சென்று, அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கிட்னியை அகற்றினர். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை கந்து வட்டி கும்பல் வசூலித்துக் கொண்டது.
இந் நிலையில், ஊர் திரும்பிய விவசாயி சதாசிவ் குடே, தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து காவல்துiயில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில, போலீஸார் வழக்குப் பதிந்து, கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அறுவை சிகிச்சை செய்த கொல்கத்தா டாக்டர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.