ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில்கூட போலி வாக்காளர்கள்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ அப்போதெல்லாம் அதைத் திசை திருப்ப திமுக, மற்ற விவகாரங்களை கையில் எடுப்பது வழக்கம். அதன்படி, திமுக எஸ்ஐஆர் பணியை எதிர்த்துள்ளது என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலும் போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே, வாக்காளர்களிடையே ஒரு நியாயமான திருத்தமாக இச் சிறப்பு தீவிர திருத்தம் தேவை.

உண்மையான வாக்காளர்களை வாக்களிக்க கொண்டு வருவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. எஸ்ஐஆர் நோக்கம் அதுதான் என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.