பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலார்கள் உயிரிழப்பு!

திருச்சி அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ரவி (30), பிரபு (323) ஆகிய இரு ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், விஷவாயு தாக்கியதில் அவ்விருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், அவ்விருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.