சீமான் ஒழிக…. த.வெ.க தொண்டர்கள் கோஷம்!

மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு இன்று மாலை துவங்கவுள்ள நிலையில், மாநாட்டில் பங்கேற்க நேற்று மாலை முதல் தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் ‘சீமான் ஒழிக’ என த.வெ.க. தொண்டர்களின் கோஷம் விண்ணை எட்டுகிறது.


நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக கட்சியையும் அதன் தொண்டர்களையும் அண்மையில் விமரிசித்த நிலையில் அவருக்கு எதிராக தவெக தொண்டர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

Comments are closed.