பாரம்பரிய பலகாரங்கள் கண்காட்சி!

தீபாவளி பண்டிகையையொட்டி திருவையாறில் பாரம்பரிய பலகாரங்கள் கண்காட்சி நடைபெற்றது.

வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்வதை ஊக்குவிக்கவும், இதை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் திருவையாறு சரஸ்வதி அம்பாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இக் கண்காட்சிக்கு திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார்.

திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமம், காவிரி பாரம்பரிய மையம், தஞ்சாவூர் நியூ டவுன் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வீடுகளில் தயாரித்த விதவிதமான முறுக்கு வகைகள், பொருள்விளங்கா உருண்டை, பயறு உருண்டைகள், லட்டு, சிறுதானிய மிக்சர், இனிப்பு வகைகள், தீபாவளி மருந்து உள்ளிட்ட பலவித பதார்த்தங்களையும் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.


இதில் சிறந்த பலகாரங்கள் செய்து வெற்றி பெற்றவர்களுக்கு திருவையாறு காவல் உதவி ஆய்வாளர் உதயசந்திரன், பாரதி இயக்க நிர்வாக அறங்காவலர் ராஜராஜன், செல்லம்மாள் பாரதி மகளிர் மன்றத் தலைவர் சரிதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

Comments are closed.