தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, சமயபுரம், மதுரை, நெல்லை, விக்கிரவாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இக் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 6,606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது திருச்சி, சமயபுரம், மதுரை, நெல்லை, விழுப்புரம், விக்கிரவாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள 38 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

Comments are closed.