சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானம் ஒரே நேரத்தில் அதிக அளவில் ‘ட்ராக்’ செய்யப்பட்டு உலக அளவில் சாதனை புரிந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியில் இருந்து சனிக்கிழமை (செப்.13) தொடங்கினார்.
சென்னையில் சனிக்கிழமை காலை 8.55 மணிக்கு புறப்பட்ட விஜய்யின் விமானம், திருச்சிக்கு 9.34 மணிக்கு. அதாவது 39 நிமிடங்களில், சென்றடைந்தது.

திருச்சி சென்ற விஜய்யின் விமானத்தை நேற்று ஒரே நாளில் சுமார் 9,000 பேர் ட்ராக் செய்துள்ளனர். இந்நிலையில், உலகளவில் ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் செய்யப்பட்ட விமானம் என்ற பெருமையை விஜய்யின் விமானம் பெற்றுள்ளது.
விஜய் பயன்படுத்திவரும் VT TSG Hawker 800XP என்ற தனி விமானம் சொகுசு போன்றல்லாமல் நடுத்தர விமானம்தான எனக் கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.100 கோடி. இதில் 8 முதல் 13 பேர் பயணிக்கலாம். 4,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லக்கூடியது.

Comments are closed.