16 மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை: இன்னும் கைது செய்யப்படாத ‘செக்ஸ்’ சாமியார்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுவரும் ‘செக்ஸ்’ சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்ன காரணத்தினாலோ இன்னும் கைது செய்யப்படவில்லை.

புது தில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனம் ‘ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்திய மேனேஜ்மென்ட்.

கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீசாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந் நிறுவனத்தில் தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இந் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் என்ற பார்த்தசாரதி பல மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.


நிறுவன வளாகத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் சாமியார் மீதான புகார் உறுதியானது. அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவிகளுக்கு சாமியார் செக்ஸ் தொல்லைகள் கொடுத்து வருவது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரும், மற்றொரு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையான விமானப்படை அதிகாரி ஒருவரும் முறையே கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்ரீசாரதா பீடத்திற்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். புதுதில்லி விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்தும் புகார்கள் அனுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீசாரதா பீடத்தைச் சேர்ந்தவர்கள் தில்லியில் உள்ள அக் கல்லூரிக்குச் சென்று அங்கு பயிலும் 32 மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், சாமியார் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. தனது இச்சைக்கு உடன்பட மறுக்கும் மாணவிகளை அவர் சீர்குலைத்ததும் இவ்விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 16 மாணவியரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதில், செக்ஸ் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மாணவியரை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

மாணவியர்க்கு செக்ஸ் சாமியார் அனுப்பிய ஆபாச குறுந் தகவல்கள், படங்கள் உள்ளிட்டவை ஆதாரமாக பெறப்பட்டன. இவ்விவகாரத்தில் செக்ஸ் சாமியார் சைதானந்த சரஸ்வதிக்கு உடந்தையாக இருந்த கல்லூரி துணை முதல்வர் ஸ்வேதா உள்ளிட்ட மேலும் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ செக்ஸ் சாமியார் இன்னும் கைது செய்யப்படவில்லை.

Comments are closed.