தமிழகத்தில் நடப்பாண்டில் தீபாளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மது விற்பனையை ரூ.600 கோடிக்கு உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு வாணிப கழக (டாஸ்மாக்) நிர்வாகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,829 மதுக்கடைகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாள்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கும்.

அதிலும், பண்டிகை காலம் என்றால், மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயரும். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதையடுத்து, நிகழாண்டு மது விற்பனையை ரூ.600 கோடியாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் நிர்ணயித்த இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது, அக்.18ஆம் தேதி ரூ.230.6 கோடி, அக்.19ஆம் தேதி ரூ.293.73 கோடி, தீபாவளி நாளான திங்கள்கிழமை (அக்.20) ரூ.266.6 கோடி என மொத்தம் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

Comments are closed.