எடப்பாடி பழனிசாமி வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்: எதிரணியினரின் சதிச் செயல்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை அதிமுக கொடியேந்திய எதிரணியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரத்தில் ஈடுபடச் சென்ற எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை அதிமுக கொடிகளுடன் இடைமறித்த பெண்கள், ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என முழக்கமிட்டு, கையில் பதாகைகளுடன் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும், அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
எனவே, அதிமுக கொடியேந்திய அப்பெண்கள் எதிரணியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்களின் ஆதரவாளர்களின் திட்டமிட்ட சதி என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள்.

Comments are closed.