புயலில் சரிந்து விழுந்து உடைந்த சுதந்திர தேவி சிலை

பிரேசில் நாட்டில் நிறுவப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரேசில் குவாய்பா நகரில் உள்ள தனியார் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு 11 மீட்டர் அடித்தளத்தில் 24 மீட்டர் உயர சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டது. மொத்தம் 114 அடியாகும்.

இந்நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் உருவான புயல் காரணமாக பல நகரங்கள் வெள்ளக் காடாயின. இப் புயலானது கடந்த திங்கள்கிழமை குவாய்பா பகுதியை கடக்கும்போது பலத்த காற்று வீசியுள்ளது.

இதன் காரணமாக, 24 மீட்டர் உயர சுதந்திர தேவியின் சிலை சரிந்து தரையில் விழுந்து துண்டு துண்டாக உடைந்தது.

இச் சிலை அசையத் தொடங்கியவுடன் வணிக வளாகத்தின் நிர்வாகத்தினர் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அப் பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.