அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியான சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments are closed.