அரசு விழாவில் கலந்து கொள்ள தென்காசி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் உற்சாகமாக சிலம்பம் சுற்றினார்.
தென்காசி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் சாலையின் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சாலையில் சிலம்பம் சுற்றி முதல்வரை மாணவ, மாணவியர் வரவேற்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவியருடன் இணைந்து உற்சாகமுடன் சிலம்பம் சுற்றினார்.

Comments are closed.